அதிகமாகவே தண்டனை அனுபவித்துவிட்ட பேரறிவாளனை விடுவியுங்கள் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
அந்த பதிவில் மேலும்,
பேரறிவாளனை விடுதலை செய்ய போதுமான அளவுக்கு நேரம் காலம் பார்த்தாயிற்று.
இனியும் வேறு அனுகூலங்களுக்காகக் காத்திருப்பதில் பொருள் இல்லை.
உடனே செயல்படுங்கள்; அதிகமாகவே தண்டனை அனுபவித்துவிட்ட பேரறிவாளனை விடுவியுங்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.