இணைய வேகத்தில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளிய இலங்கை!

Report Print S.P. Thas S.P. Thas in இன்ரர்நெட்

இலங்கையின் இணைய வேகம் இந்தியாவை விடவும் அதிகமாக உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய இந்தியாவின் 4G வேகம் நொடிக்கு 6.07 பைட் வேகமாக பதிவாகியுள்ளது. எனினும் இலங்கையின் அந்த வேகம் நொடிக்கு 13.95 மெகா பைட் வேகமாக பதிவாகியுள்ளது.

பாகிஸ்தானில் அந்த வேகம் நொடிக்கு 13.56 மெகா பைட் வேகமாக பதிவாகியுள்ளது.

உலக இணைய வேகம் அதிகமான நாடாக சிங்கப்பூர் காணப்படுகின்றது. அவர்களின் இணைய வேகம் நொடிக்கு 44.31 மெகா பைட் வேகமாகும். அமெரிக்காவின் இணைய வேகம் நொடிக்கு 16.31 மெகா பைட் வேகமாக பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

உலகின் அதிக 4G இணைய வசதிகளை உள்ளடக்கும் நாடுகளுக்குள் தென் கொரியா முதலிடத்தை பிடித்துள்ளது. அதன் அளவு 97.49% வீதமாகும்.