இரகசிய சித்திரவதை முகாம் மற்றும் கோத்தபாய இராணுவ முகாம் தொடர்பில் வெளிப்படுத்திய முக்கியஸ்த்தர்

Report Print Dias Dias in நேர்காணல்

கொழும்பில் தாக்கல் செய்யப்பட்ட 5 மாணவர்கள் கடத்தல் வழக்கில் முக்கியமான மூன்று இரகசியங்கள் அம்பலமாகியுள்ளன என சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

ஒன்று திருகோணமலையில் இரகசிய சித்திரவதை முகாம்கள் இருந்தன மற்றும் கோத்தபாய இராணுவ முகாம் அமைக்கப்பட்டமை என்பவை இதன்மூலம் அம்பலமாக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் முடிந்த பின்னர் தாக்கல் செய்யப்பட்ட பல ஆட்கொணர்வு மனுக்களில் எந்த மனுக்களுக்கும் பிரதி பலன்கள் கிடைக்கவில்லை என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

பல சிரமங்களுக்கு மத்தியில் காணாமல் போனோருக்கான பணியகம் ஆரம்பிக்கப்பட்டு அதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த பணியகத்தில் காணாமல் போனோருக்கான சேவை கிடைக்குமா? இதன் மூலம் தீர்வு கிடைக்குமா என்பது கேள்விக்குறிய விடயம் என கே.வி.தவராசா குறிப்பிட்டுள்ளார்.

லங்காசிறி 24 செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில்,