வடகொரியா ஜனாதிபதி மற்றும் ட்ரம்ப் சிங்கப்பூரை பேச்சுக்காகத் தெரிவு செய்ததற்கான உண்மைகள் வெளிவந்தன

Report Print Dias Dias in நேர்காணல்

இன்றைய நடைமுறை உலகில் பேசுபொருளாக மாறியுள்ளதும் சர்வதேசத்தை திரும்பிப்பார்க்க வைத்துள்ளதும் என்றால் அது அமெரிக்கா மற்றும் வடகொரியா ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான நல்லெண்ண நடவடிக்கைகள்தான்.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதிவியேற்றதன் பின்னரே வடகொரியா தனது அணு ஆயுத சோதனையை தீவிரப்படுத்தியது, அதன் பிறகு இதனை மையப்படுத்தியே இரு நாடுகளுக்கும் இடையில் போர் மூழும் என்ற அபாய நிலை இருந்தது என கனடாவில் உள்ள மூத்த அரசியல் ஆய்வாளர் நேரு குணரத்தினம் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் அரசியல் களம் வட்டமேசை நிகழ்ச்சிக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது இவ்வாறிருக்க எதிர்வரும் ஜூன் மாதம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் ஆகிய இருவரிற்கும் இடையில் நல்லெண்ண சந்திப்பு ஒன்று சிங்கப்பூரில் இடம்பெறவுள்ளது.

இவர்களது சந்திப்பு தொடர்பிலும், இவர்களது பேச்சுவார்த்தைக்கு சிங்கப்பூரை தேர்ந்தெடுத்ததற்கான காரணங்கள் தொடர்பிலும் சர்வதேச ரீதியில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள கனடாவின் மூத்த அரசியல் ஆய்வாளர் நேரு குணரத்தினம்,