விஜயகலா மகேஸ்வரனை பலி கொடுத்தாவது அரசியல் இருப்பை தக்கவைக்க அரசு தயங்காது

Report Print Dias Dias in நேர்காணல்

விஜகலா மகேஸ்வரனின் கருத்தானது அனைத்து தரப்பிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்ததுடன், அவரது நாடாளுமன்ற உறுப்புரிமைகளும் பறிக்கப்படும் நிலைக்கு சென்றுள்ளது.

அந்த வகையில் விஜயகலா மகேஸ்வரனை பலி கொடுத்தாவது தமது அரசியல் இருப்பை தக்க வைத்துக்கொள்ள சிங்கள அரசு தயங்காது என லங்காசிறியின் வட்டமேசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிரேஸ்ட ஊடகவியலாளரான நிராஜ் டேவிட் தெரிவித்துள்ளார்.

விஜயகலா மகேஸ்வரன் மீது கொண்ட பாசத்தால் அமைச்சுப்பதவி கொடுக்கப்படவில்லை. தமிழர்களுக்கு ஏதாவது வழங்க வேண்டும் என்பதற்காகவும் வழங்கப்படவில்லை. விஜயகலா நல்ல வாக்குகளை பெற்றுத்தரக்கூடிய ஒருவர் என்பதாலேயே அவருக்கு பதவி வழங்கப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.