மஹிந்த தலைமையில் 5ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட அரசுக்கு எதிரான “ஜனபலய கொலம்பட்ட” என்ற போராட்டம் இலங்கையில் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட விடயமாக அமைந்திருந்தது.
இந்த போராட்டம் வெற்றியளித்ததாக மஹிந்த தரப்பும், தோல்வியடைந்ததாக நல்லாட்சி அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளும் கூறிவந்தன. அந்த வகையில் இப்போராட்டத்தின் உண்மை நிலை என்ன என்பது பற்றி அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவின் முன்னாள் பிரதமரான மறைந்த வாஜ்பாயின் மரணம் குறித்தும், இவருடைய காலத்தில் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் புலிகளுக்கு செய்த உதவிகள் குறித்தும் சிரேஷ்ட சட்டவாளரும், அரசியல் ஆய்வாளருமான எம்.எம். நிலாம்டீன் அவர்கள் லங்காசிறியின் அரசியற்களம் வட்ட மேசையில் கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.