இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு பயணத் தடையும் வெளிநாடுகளில் காத்திருக்கும் நெருக்கடிகளும்

Report Print Dias Dias in நேர்காணல்

சிங்கள அரசுகளின் தமிழ் விரோத அரசியல் செயட்பாடுகள், போர்க்குற்ற விசாரணைகளின் காலதாமதம் மற்றும் கனடிய சட்ட வரையறைக்குள் போர்க்குற்றம் சாட்டப்பட்டோருக்கு எதிராக பயணத் தடை விதிக்கலாம் மற்றும் அவர்களின் முதலீடுகள், சொத்துக்களை முடக்கலாம் என கனடிய conservative கடசியின் துணை நிழல் வெளிவிவகார அமைச்சர் Hon. Garnett Genius தெரிவித்துள்ளார்.

இலங்கை தீவில் உருவாகியுள்ள அசாதாரண அரசியல் சூழலால் தமிழர் மற்றும் சிறுபான்மை இனங்களுக்கு ஆபத்து என சர்வதேச நாடுகள் கருதும் சூழலில் அது தொடர்பில் எமது லங்காசிறிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள அரசுகளின் தமிழ் விரோத அரசியல் செயட்பாடுகள், போர்க்குற்ற விசாரணைகளின் காலதாமதம் மற்றும் கனடிய சட்ட வரையறைக்குள் போர்க்குற்றம் சாட்டப்பட்டோருக்கு எதிராக பயணத் தடை விதிக்கலாம் மற்றும் அவர்களின் முதலீடுகள், சொத்துக்களை முடக்கலாம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இவை குறித்து மேலும் விவாதிக்கவும், கனடிய அரசு மூலம் எவ்வாறு மேலும் அழுத்தங்களை பிரயோகித்து சிங்கள அரசை சர்வதேச போர் குற்ற விசாரணைக்கு உட்படுத்த முடியும் என கலந்துரையாடவும், கனடிய பாராளுமன்றில் அவரை சந்தித்து அவரிடம் செவ்வி எடுக்கப்பட்டது.

இந்நிலையில், கனடிய அரசில் பிரதி அமைச்சராக கரி ஆனந்த சங்கரி உள்ள நிலையில் இலங்கையில் போர் குற்றம் புரிந்தவர்களிற்கு கனடாவிற்குள் நுளைவதற்கான பயணத் தடைகளை இலகுவாக மேற்கொள்ள முடியும் என அரசியல் அவதானிகளும் சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers