சர்வதேசத்திடம் இருந்து மகிந்த மைத்திரியை காப்பாற்றும் இலங்கையின் முக்கிய பிரபலம்

Report Print Dias Dias in நேர்காணல்

ஐக்கிய நாடுகள் சபையின் நாற்பதாவது மனிதவுரிமைகள் மாநாடு ஜெனிவாவில் நடந்து கொண்டிருக்கிறது. இலங்கை தொடர்பில் ஐநா மனிதவுரிமைகள் ஆணையாளர் விசேட அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

பல்வேறு குற்றச்சாட்டுக்களை அவ்வறிக்கை சுட்டியிருக்கும் நிலையில், அவ்வறிக்கையில் சொல்லப்பட்டுள்ள அனைத்தும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.

இந்நிலையில், இலங்கை அரசாங்கத்திலிருந்து இரு தரப்பாக பிரதிநிதிகள் ஐநாவை முற்றுகையிட்டுள்ளனர். பிரதமர் ரணில் தரப்பு பிரநிதிகளும், ஜனாதிபதி மைத்திரி தரப்பிலிருந்து ஒரு தரப்பும் அங்கு செல்ல தீர்மானித்திருக்கிறது.

இலங்கை அரசாங்கம் கால அவகாசங்களை பெற்றுக் கொண்டு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இழுத்தடிக்கும் செயற்பாடுகளுக்கு பல்வேறு தரப்பும் தங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையில் இம்முறை இலங்கை என்ன செய்யக் காத்திருக்கிறது? இலங்கை அரசாங்கம் தன்னுடைய செயற்பாடுகள் மூலமாக தன்னை எப்படி சர்வதேச அரங்கில் இருந்து தற்காத்துக் கொள்கிறது? இலங்கைக்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் நீடிப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக தெரிகிறது.

இது தொடர்பில் பேராசிரியர் போல் நியுமன் லங்காசிறியின் 24 செய்திச் சேவைக்கு பிரத்தியேக செவ்வியினை வழங்கியிள்ளார்.

அதில், சர்வதேசத்திடம் இருந்து மகிந்த மைத்திரியை காப்பாற்றும் இலங்கையின் முக்கிய பிரபலம் யார்? என்பது தொடர்பிலும் பேசியிருக்கிறார்.

செவ்வியின் முழுவடிவம் இணைக்கப்பட்டுள்ளது,