நாட்டில் இடம்பெற்ற குற்றங்களை முஸ்லிம்களாகிய நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை : அசாத்சாலி உறுதி

Report Print Satha in நேர்காணல்

ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பான குற்றங்களை முஸ்லிம்களாகிய நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை என மேல் மாகாண ஆளுநர் அசாத்சாலி தெரிவித்துள்ளார்.

நாங்கள் 1994ஆம் ஆண்டில் இருந்தே அரசாங்கத்திற்கு தெளஹீத் ஜமாத் என்றால் என்ன அவர்கள் எவ்வாறான தீவிரவாதிகள் என்பதை தொடர்ந்தும் கூறி வந்துள்ளோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எமது செய்தி சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நான் என்னுடைய 6 ஊடகவியலாளர் சந்திப்பிலும் இந்த தெளஹீத் ஜமாத் தொடர்பான விடயங்கள் பற்றி உரையாற்றியுள்ளேன்.

இது தொடர்பில் ஆளுநர் அலரிமெளலானவுடனும் பேசியுள்ளேன். நாட்டில் உள்ள மக்கள் அனைவருடனும் ஒற்றுமையாக, ஒன்றுபட்டு வாழ்வதே எனது நோக்கமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.