அரசியல் கைதிகள் விவகாரத்தில் நடக்கபோவது என்ன? ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா வெளியிட்ட தகவல்

Report Print Murali Murali in நேர்காணல்

அரசியல் கைதிகளின் விடுதலை என்பது மிகவும் மந்தகதியில் இருப்பதாகவும், இதற்கு பல காரணங்கள் இருப்பதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 2015ம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் சுமார் 40 பேர் வரையிலான அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

லங்காசிறியின் அரசியல் களம் வட்டமேசை நிகழ்ச்சிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“தற்போது அரசியல் கைதிகளின் விவகாரம் என்பது மிகவும் மந்தகதியிலேயே கையாளப்படுகின்றது. எனினும், கடும் குற்றங்களில் ஈடுபட்டவர்களே தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பினர் தெரிவிக்கின்றனர்.”

மேலும், இதன்போது அரசியல் கைதிகள் குறித்த அடுத்த கட்டநடவடிக்கைகள், சமகால சட்டவிவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அவர் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.