மகிந்த ஆட்சிக்கு வந்தால்!!! வடக்கு ஆளுநர் இந்த தமிழரா?

Report Print Murali Murali in நேர்காணல்

விடுதலைப் புலிகளின் தலைவர் யாருக்காக போராடினாரோ, அவர்களே முற்றிலும் பிழையானவர்கள் என சிரேஷ்ட ஊடகவியலாளர் வித்தியாதரன் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.சி தமிழ் செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டிருந்த அவர்,

தமிழ் மக்களுக்காகவே, கழுத்தில் சைனட் குப்பிகளை கட்டிக்கொண்டு இளைஞர்களை போராடுமாறு விடுதலைப் புலிகளின் தலைவர் வலுப்படுத்தினர். எனினும், அதனை தமிழ் மக்கள் மறந்துவிட்டனர்.

முள்ளிவாய்க்காளில் என்ன நடந்தது என்றது அனைவருக்கும் தெரியும். தமிழர்களுக்கு எதிராக மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தி விட்டு, மிகவும் துணிவாக மகிந்த ராஜபக்ச பொது தேர்தலை நடத்தினார்.

யாழ்ப்பாணம் தமிழருடைய மூல மையம். எனினும், அந்த தேர்தலில் மகிந்த ராஜபக்சவிற்கு 48 ஆயிரம் வாக்குகளை தமிழ் மக்கள் வழங்கினார்கள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தன்னை வடக்கு மாகாணத்தின் ஆளுநராக ஒருபோதும் நியமிக்க மாட்டார் என சிரேஷ்ட ஊடகவியலாளர் வித்தியாதரன் மேலும் கூறியுள்ளார்.