மகிந்தவிற்கும் புலிகளின் தலைவருக்குமிடையில் தூது சென்ற முக்கிய நபர்!

Report Print Murali Murali in நேர்காணல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் இடையில் ஒரு இணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முதல் தூதுவர் நான் தான் என சிரேஷ்ட ஊடகவியலாளர் வித்தியாதரன் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.சி தமிழ் செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டிருந்த அவர்,

“ஒரு ஊடகவியலாளர் என்ற வகையில் நான் அனைவர் மத்தியிலும் சமதூரத்தில் இருந்திருக்கின்றேன். என்னுடைய வெற்றியும் அதுவாகவே இருந்துள்ளது.

கடத்தப்பட்டு இரண்டு மாதங்கள் கழித்து உயிருடன் திரும்பினேன் என்றால், நான் என்னுடைய பேனாவுக்கு உண்மையாக இருந்திருக்கின்றேன்” என அவர் மேலும் கூறியுள்ளார்.