ஜெனிவாவில் இலங்கை வெளியேறியது எமக்கு வெற்றி! அடுத்த இலக்கு குற்றவியல் நீதிமன்றம்

Report Print Murali Murali in நேர்காணல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை தீர்மானத்திலிருந்து இலங்கை விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், அது எமக்கு மன சோர்வை தராது என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 43வது அமர்வு கடந்த 24ம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகியது. இந்நிலையில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான அமர்வு இன்று நடைபெற்றது.

இலங்கையின் சார்பில் ஜெனிவா பேரவையில் இன்று உரையாற்றிய அமைச்சர் தினேஷ் குணவர்தன, இலங்கையானது 2015ம் ஆண்டு ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட 30/1 என்ற பிரேரணைக்கான அனுசரணையிலிருந்து விலகிக்கொள்வதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில், இந்த கூட்டத்தொடரில் வடக்கு கிழக்கில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில், மூவர் பிரதிநிதியாக கலந்துகொண்டிருந்தனர்.

அவர்கள் லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியில் இவ்வாறு கூறியுள்ளனர்.