இலங்கையில் பத்து இலட்சம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்க நடவடிக்கை!

Report Print Vethu Vethu in வேலைவாய்ப்பு

இலங்கையில் எதிர்வரும் காலங்களில் பொருத்தமான தொழில் ஆற்றல் கொண்டவர்களை உருவாக்கும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலுக்கு பொருத்தமான பயிற்சி பாடநெறிகளை ஆரம்பித்து தொழில் ஆற்றல்களை கொண்டவர்கள் உருவாக்கப்படவுள்ளதாக திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

காலியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமைச்சர்,

எங்கள் நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதே இன்று எமக்குள்ள பொறுப்பாக உள்ளது.

பலர் இன்று 10 இலட்ச தொழில் வாய்ப்பு குறித்து பேசுகின்றார்கள். எனினும் எந்த வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை. இலங்கைக்கு முதலீட்டாளர்கள் வருகை தருகின்ற போதிலும் அவர்களின் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய பயிற்சி பெற்ற ஊழியர்கள் இல்லை.

தொழில் வாய்ப்பற்ற துறைகளிலேயே இளைஞர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். அனைவரும் கணனி பயிற்சி என்று செல்கின்றார்கள். எனினும் தொழில் இல்லை. நான் அண்மையில் பெற்றோலிய அமைச்சின் நடவடிக்கைகளுக்கு கட்டுமான துறையில் ஈடுபடும் மேசன், தச்சன் போன்றவர்களை தேடினேன். எனினும் பயிற்சி பெற்ற ஒருவரும் இல்லை. அந்த தொழில்களுக்கு பெரிய அளவில் சம்பளம் கிடைக்கின்றது. எனினும் அந்த தொழில் செயற்வதற்கு ஒருவரும் இல்லை.

எனது புதிய அமைச்சின் ஊடாக இலங்கையின் வடக்கில் இருந்து தெற்கு வரை அனைத்து சிறுவர்கள் முதல் பெரியவர்களுக்கும் பொருத்தமான தொழில் பயற்சி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments