யாழில் 33 ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர் யுவதிகள் தொழில்கோரி விண்ணப்பம்

Report Print Ajith Ajith in வேலைவாய்ப்பு

யாழ்ப்பாணத்தில் 33 ஆயிரத்து 204 இளைஞர் யுவதிகள் கடந்த ஒரு மாதத்தில் தொழில்வாய்ப்பு கோரி விண்ணப்பித்துள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் தொழில்துறை பிரிவில் அவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இவ்வாறு விண்ணப்பித்தவர்களுள் பட்டதாரிகள், கல்விப் பொதுத்தராதர உயர்தர மற்றும் சாதாரணதர பரீட்சைகளில் சித்திபெற்ற பெரும்பாலானோர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் தொழிலற்ற சுமார் 40 ஆயிரம் பட்டதாரிகள் உள்ளதாக வடமாகாணத்தில் உள்ள தொழில்கோரும் பட்டதாரிகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவர்களுள் 12 ஆயிரம்பேர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என அந்தச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.