வடக்கிற்கு சிங்கள உத்தியோகத்தர்களை அனுப்பும் அரசுக்கு முதலமைச்சரின் கோரிக்கை!

Report Print Sumi in வேலைவாய்ப்பு

வடமாகாணத்திற்கு நியமிக்கும் சிங்கள உத்தியோகத்தர்களை யாழ்ப்பாணத்தில்கடமையாற்ற வடமாகாண முதலமைச்சர் சீ,வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன்,குறிப்பாக, மன்னார் உட்பட வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடமையாற்றவேண்டிய அவசியமில்லை, அந்த மாவட்டங்களில் எமது தமிழ் மக்கள் கடமையாற்றவேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.

வடமாகாணத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர்களாக சிங்கள உத்தியோகத்தர்கள்நியமிக்கப்பட்டமை தொடர்பாக கேட்ட போதே முதலமைச்சர் இவ்வாறு ஊடகங்களுக்குத்தெரிவித்தார்.

வடமாகாணத்தில் பணியாற்ற போதிய அலுவலர்கள் இல்லை. அரசாங்கம் தமக்கு ஏற்றவாறுதமக்கு வேலை செய்வதற்காக சிங்கள உத்தியோகத்தர்களை நியமிக்கின்றார்கள்.

வழிகளில் வேலை செய்வதற்கான செயற்திட்டங்கள் உள்ளன. அதில், அரசாங்கமும்,மாகாண அரசும் இணைந்து செய்வதற்கான செயற்திட்டம் உள்ளது.

அரசாங்கம் தனியாக செய்ய ஒருசெயற்திட்டம். மாகாண சபை தனியாக செய்ய ஒரு செயற்திட்டம் உள்ளது.

ஆனால், அரசாங்கத்திற்கு உள்ள உரித்துக்களின் அடிப்படையில் சிலஉத்தியோகத்தர்களை அனுப்புகின்றார்கள்.அந்த உத்தியோகத்தர்களுக்கு இங்குள்ள இடங்கள் தெரியாது, மொழிப்பிரச்சினைஉள்ளது.

வடபகுதியைச் சேர்ந்தவர்களை நியமிக்க கோரினால், தாம்பார்த்துக் கொள்வதாக கூறுவார்கள். ஆனால், நியமிக்க மாட்டார்கள்.சமூர்;த்தி அலுவலர்களை நியமித்தது எனக்குத் தெரியாது.

இது அரசாங்கத்தில் உள்ளமிகப்பெரிய பிரச்சினை. எம்முடன் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டிய ஒருவிடயம்.

உதாரணமாக வவுனியா மற்றும் மன்னார் அரசாங்க அதிபர்கள் சிங்கள இனத்தைச்சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். தமிழ் பிரதேசங்களில் சிங்களஅலுவலர்களையும், சிங்கள பிரதேசங்களில் தமிழ் அலுவலர்களையும் நியமிப்பதாக கூறி,லோகேஸ்வரனை வடமத்திய மாகாணத்திற்கும் அனுப்பியுள்ளார்கள்.

சிங்கள உத்தியோகத்தர்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்புவதை விடுத்து, ஏன்வவுனியாவிற்கும், முல்லைத்தீவிற்கும், மன்னாருக்கும் அனுப்ப வேண்டும் என்றும்கேள்வி எழுப்பினார்.

அந்த உத்தியோகத்தர்கள் இருக்கும் போது தான், பல விதமான குடியேற்றங்களும்நடைபெறுகின்றன. அந்தப் பிரதேசங்களில் தெற்கில் இருந்து வந்துகுடியேறுகின்றார்கள்.

தமிழ் பிரதேசங்களில் சிங்கள அலுவலர்களும், சிங்கள பிரதேசங்களில் தமிழ்அலுவலர்களும் நியமிக்கப்படுவார்கள் எனக் குறிப்பிட்டால், அந்த சிங்களஅலுவலர்களை யாழ்ப்பாணத்திற்கு அழைக்கின்றேன்.

யாழ்ப்பாணத்தில் இருந்து அந்தஅலுவலர்கள் தமது வேலைகளைச் செய்யட்டும். வவுனியா உட்பட முல்லைத்தீவு மற்றும்மன்னார் மாவட்டங்களில் அவர்கள் தமது வேலைகளைச் செய்ய வேண்டிய அவசியமில்லை.

குறித்த மாவட்டங்களிலும், எமது தமிழ் மக்களே தமது வேலைகளைச் செய்யவேண்டுமென்றும் சுட்டிக்காட்டினார்.