தொந்தரவு தரமாட்டேன் என்று கூறிவிட்டுச் சென்ற வயோதிபர் சடலமாக மீட்பு!

Report Print Mubarak in வாழ்க்கை முறை
345Shares

திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போன வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தளாய் நீதிமன்றத்துக்குப் பின்புறமாகவுள்ள காணியில் இருந்தே குறித்த முதியவரின் சடலம் இன்று காலை, மீட்கப்பட்டுள்ளதாகக் கந்தளாய் பொலிஸார் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாணையின் போது, பியந்த மாவத்தையில் வசித்து வந்த 87 வயதான எச்.ஏ.தோமஸ் சிங்ஹ(87) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், இன்றைய தினமே, உயிரிழந்தவரின் மகள் தனது தந்தை காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை உயிரிழந்த முதியவர் குடும்பத்தாருடன் முரண்பட்டுக்கொண்டு, இனிமேல் உங்களுக்குத் தொந்தரவு தரமாட்டேன் என்று கூறிவிட்டுச் சென்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், முதியவரின் சடலத்தினையும் மீட்டுள்ளனர்.

இந்நிலையில் சடலம் தொடர்பான விசாரணைகளை கந்தளாய் நீதவான் மேற்கொண்டதுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸார் சடலத்தை கந்தளாய் பொது வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Comments