எனது கணவரை கொழும்பில் கோத்தபாயவின் ஆட்கள் தான் கடத்தினர்! மனைவி ஆவேசம்

Report Print Samy in வாழ்க்கை முறை
129Shares

எனது கணவர் கடத்தப்பட்ட கால கட்டத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோத்தபாயராஜபக்சவே இருந்தார் அக்கால கடத்தில் கொழும்பு அதியுயர் பாதுகாப்புக்குஉட்பட்டிருந்தது.

எனவே எனது கணவரை கடத்தியவர் கோத்தபாய ராஜபக்சவின் ஆட்கள் தான்,அங்கு விடுதலைப் புலிகளா வந்து கடத்தினர்கள். எனவே இதற்கான தீர்வினை அரசுதான்வழங்கவேண்டும்.

மரணச் சான்றிதழோ அல்லது நஸ்டஈடோ எனக்கு தேவையில்லை என காணாமல்ஆக்கப்பட்ட மட்டு. புதுக்குடியிருப்பை சேர்ந்த சந்திரலிங்கம் என்பவரின் மனைவி லலிதாதெரிவித்தார்.

நல்லிணக்க பொறிமுறைகள் பற்றி கலந்துரையாடுவதற்கான செயலணியின் அமர்வு இன்று வெள்ளிக்கிழமை (12) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கேட்ப்போர்கூடத்தில் அணியின் செயலாளர் அ.காண்டீபன் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டுகருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இறப்பு சான்றிதழினை நான் ஒருபோதும்எற்றுக் கொள்ளமாட்டேன். அவர்கள் இறந்துள்ளார்கள் ஆயின் அவர்கள் என்ன குற்றம்செய்துள்ளனர் என்பதனை அரசாங்கம் முன்வைக்க வேண்டும்.

எந்தவித நஷ்டஈடுகளையும் நான்ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. எனக்கு தேவை பறிக்கப்பட்ட உயிர்தான். இதனை விட நான் வேறு ஒன்றையும் எதிர்பார்க்கவில்லை.

என்னுடைய பிள்ளைக்கு அப்பா என்றுசொல்வதற்கு எனது கணவரை மீட்டுத்தாருங்கள்.

2008.26.20 திகதி எனது கணவர் கொழும்பில் வைத்தே வெள்ளை வானில் கடத்தப்பட்டார்.அந்த நேரத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தவர் கோத்தபாய ராஜபக்சஅவர்கள்.

அதிஉயர் பாதுகாப்பு வலயமாக கொழும்பு காணப்பட்டது. இக் காலகட்டத்திலையேதான்எனது கணவர் கடத்தப்பட்டிருந்தார். இவ்வாறான பாதுகாப்பு சூழ்நிலையில் விடுதலைப்புலிகளா?வந்து கடத்தினார்கள்.

எனவே அரசாங்கம் தான் எனது கணவரை கடத்தியது. எனது கணவர் என்னகுற்றம் செய்தார்? அதனை வெளிக் கொண்டு வாருங்கள். அவர் எந்த விதமான குற்றச் செயலிலும்ஈடுபட்டவர் அல்ல. மாறாக காப்புறுதி நிறுவனம் ஒன்றிலேயே கடமையாற்றி வந்தார்.

எனவே எனதுகணவர் எவ்வாறு எதற்காக காணாமல் ஆக்கப்பட்டார் என்பதனை அரசாங்கம் வெளிக்காட்டவேண்டும்.

எனது கணவர் அநியாயமாக கொல்லப்பட்டிருந்தால் இதனை மேற்கொண்டவர்களுக்குஎதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

எனவே ஒருபோதும் நஷ்டஈட்டையோ அல்லதுமரணச்சான்றிதழையோ நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என அவர் இதன்போது தெரிவித்தார்.

Comments