மாவிட்டபுரம் பகுதிக்கு சந்திரிக்கா விஜயம்!

Report Print Suthanthiran Suthanthiran in வாழ்க்கை முறை
1224Shares

வலி. வடக்கில் காணிகள் இல்லாத மக்களுக்காக மாவிட்டபுரம் பகுதியில் படையினருடைய உ தவியுடன் அமைக்கப்படும் வீட்டு திட்டத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க இன்றைய தினம் நேரில் பார்வையிட்டுள்ளார்.

நேற்றைய தினம் யாழ்.வந்த அவர் இன்றைய தினம் காலை கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றை தொடர்ந்து, மாலை 3.30 மணியளவில் மாவாட்டபுரம் பகுதியில் காங்கேசந்துறை சீமெந்து தொழிற்சாலை காணியில் வலி.வடக்கில் சொந்த நிலம் இல்லாத மக்களுக்காக மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் படையினர் இணைந்து அமைத்துவரும் வீட்டு திட்டத்தை பார்வையிட்டார்.

இதன்போது படையினருடைய பணிகளை சந்திரிக்கா பாராட்டியுள்ளார். மேலும் இந்த விஜயத்தின்போது யாழ்.பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மகேஷ்சேனநாயக்காவும் கலந்து கொண்டார்.

Comments