விபத்தில் படுகாயமடைந்த இராணுவ வீரர்கள் மரணம்

Report Print Reeron Reeron in வாழ்க்கை முறை
179Shares

மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரெதிதென்னப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இராணுவ வீரர்கள் இருவர் சிகிச்சை பலனின்றி மரணமாகியுள்ளனர்.

மட்டக்களப்பு –கொழும்பு நெடுஞ்சாலையில் எல்ப் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதியதால் ஏற்பட்ட இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இராணுவ வீரர்களே மரணமாகியுள்ளனர்.

அநுராதபுரம் முகடவெல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களான கே.பி.நிஹால் பண்டார (வயது 47), கே.பி.என்.குணரத்ன (வயது 38) ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில், வெலிக்கந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இருப்பினும், சிகிச்சை பயனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

இந்த விபத்தைத் எல்ப் ரக வாகனச் சாரதியை பொலிஸார்; கைது செய்ததுடன், வாகனத்தையும் கைப்பற்றி வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் வைத்துள்ளனர்.

இந்த விபத்துக் குறித்து வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Comments