பிரான்ஸ் தமிழச்சியின் கருத்தின் அடிப்படையில் வழக்கை விசாரிக்க வலியுறுத்தல்!! - புழல் சிறையில் வீடியோ எடுத்தனர்

Report Print Dr.M.Mathurageethan in வாழ்க்கை முறை

சாப்ட்வேர் என்ஜினியர் சுவாதி கொலை வழக்கு தொடர்பாக ஃபேஸ்புக்கில் பிரான்ஸைச் சேர்ந்த தமிழச்சி என்பவர் பதிவிட்டிருந்த கருத்தின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும் என்று ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜ் வலியுறுத்தியுள்ளார்.

சுவாதி கொலை வழக்கில் நெல்லையைச் சேர்ந்த ராம்குமார்தான் குற்றவாளி என்று போலீசார் கூறி அதை நிரூபிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் ராம்குமார் தரப்போ சுவாதி கொலை வழக்கில் நிறைய பேருக்கு தொடர்பு உண்டு; இதில் ராம்குமார் பலிகடாவாக்கப்பட்டுள்ளார் என்று குற்றம்சாட்டி வருகிறது.

தமிழச்சி கருத்தால் பரபரப்பு இந்த நிலையில் பிரான்ஸை சேர்ந்த பெரியாரிஸ்டான தமிழச்சி தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில், சுவாதியை கொலை செய்தது முத்துக்குமார் என்பவர்தான்...

அவர் தற்போது தஞ்சையில் பதுங்கியுள்ளார் என கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இதை நமது ஒன் இந்தியா தமிழ் இணைய தளமும் பதிவு செய்திருந்தது.

போலீசார் விசாரிக்க வேண்டும் இதனிடையே சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராம்குமார் வழக்கறிஞர் ராமராஜ் கூறியதாவது: பிரான்ஸ் தமிழச்சி வெளியிட்ட கருத்துகளுக்கு சுவாதி பெற்றோர் தரப்பில் எந்த பதிலுமே தெரிவிக்கவில்லை.

தமிழச்சி தெரிவித்துள்ள கருத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணையை நடத்த வேண்டும்

சட்டப்படி தவறு ராம்குமாரை சிறையில் போலீசார் வீடியோ எடுத்தது அரசியல் சாசன சட்டப்படி தவறானதாகும். இந்த வழக்கில் உண்மை குற்றவாளியை தப்பவிட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் போலீசார் செயல்படுகின்றனர்.

சிபிஐ விசாரிக்க கோரி மனு சுவாதி வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 17-ந் தேதியன்று ராம்குமாரின் தாயார் வழக்கு தொடர உள்ளார். இவ்வாறு ராமராஜ் கூறினார்.

சுவாதி கொலை வழக்கு: புழல் சிறையில் ராம்குமாரை போலீசார் வீடியோ எடுத்தனர்

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமாரை புழல் சிறையில் போலீசார் வீடியோ எடுத்தனர்.

சென்னை சூளைமேட்டை சேர்ந்த பெண் என்ஜினீயர் சுவாதி கடந்த ஜூன் 24-ந்தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செங்கோட்டையை சேர்ந்த ராம்குமாரை கடந்த ஜூலை 2-ந்தேதி கைது செய்தனர்.

பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர் தற்கொலை செய்து கொள்ளாத வண்ணம் எப்போதும் போலீஸ் பாதுகாப்பில் உள்ளார்.

நுங்கம்பாக்கம் போலீசார் கடந்த மாதம் புழல் சிறையில் இருக்கும் ராம்குமாரை அடையாளம் காண அணி வகுப்பும் நடத்தினர்.

இந்த வழக்கில் நுங்கம்பாக்கத்தில் சுவாதி கொலை நடந்த போது எடுக்கப்பட்ட வீடியோ படத்தில் உள்ள உருவம் கைதான ராம்குமாரின் உருவத்தோடு ஒத்துப்போகிறதா என்பதை அறிய ராம்குமாரை வீடியோ படம் எடுக்க நுங்கம்பாக்கம் போலீசார் கோர்ட்டில் அனுமதி கேட்டனர்.

இதற்கு ராம்குமார் வக்கீல் ராம்ராஜ் எதிர்ப்பு தெரிவித்தார்.இந்நிலையில் புழல் சிறையில் இருக்கும் ராம்குமாரை வீடியோ படம் எடுக்க எழும்பூர் நீதிபதி பிரகாஷ் அனுமதி அளித்தார்.

இதை தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்து வரும் நுங்கம்பாக்கம் உதவி கமி‌ஷனர் தேவராஜ், 2 போட்டோகிராபர்கள், 1 போலீசார் உள்பட 4 பேர் இன்று காலை 7 மணிக்கு ஜீப்பில் புழல் சிறைக்கு சென்றனர்.

பின்னர் சிறை அறையில் இருந்து ராம்குமார் வெளியே வந்தார். சுமார் ½ கிலோ மீட்டர் அவரை நடக்க வைத்து வீடியோவும் எடுத்து அதை பதிவு செய்தனர்.

பின்னர் 7.30 மணிக்கு திரும்பிச் சென்றனர்.இதற்கான ஏற்பாடுகளை புழல் சிறை சூப்பிரண்டு அன்பழகன் செய்து இருந்தார்.

இப்பொழுது பதிவான வீடியோவையும், நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையத்தில் கொலை நடந்த போது பதிவான வீடியோவையும் ஒப்பிட்டு பார்த்து போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

- Maalai Malar

Comments