லசந்த கொலை வழக்கு! முன்னாள் பொலிஸ் மா அதிபரிடம் விசாரணை

Report Print Kamel Kamel in வாழ்க்கை முறை

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை விசாரணைகளளை மூடி மறைத்தமை குறித்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

கொலை குறித்த தகவல்களை மூடிமறைத்தல், சாட்சியங்களை அழித்தல், விசாரணை நடத்திய பொலிஸ் குழுக்களுக்கு அழுத்தங்களை பிரயோகித்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய, சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கீர்த்தி கஜநாயக்க ஆகியோர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து குற்றப் புலனாய்வு பிரிவினர் நேற்று விசாரணை நடத்தியுள்ளனர்.

நேற்று பகல் 12.00 மணியளவில் மஹிந்த பாலசூரிய மற்றும் கீர்த்தி கஜநாயக்க ஆகியோர் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியிருந்ததுடன் மாலை வரையில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

லசந்த கொலை தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் கிரமமான முறையில் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

எனினும், விசாரணைகளை நிறுத்தி அந்த விசாரணைகளை பயங்கரவாதத் தடுப்பப் பிரிவினரிடம் முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய வழங்கியுள்ளார்.

சாட்சியங்களை மூடி மறைத்தல் அழித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் முன்னாள் பொலிஸ் மா அதிபர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

லசந்த கொலை குறித்த விசாரணைகளை மூடி மறைக்க அப்போது அரச புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய கீர்த்தி கஜனநாயக்க முயற்சித்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இருவரிடமும் நீண்ட விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Latest Offers

loading...

Comments