கொழும்பில் கைவிடப்பட்ட நிலையில் முதியவர்!

Report Print Kumutha Kumutha in வாழ்க்கை முறை

தமது வாழ்நாள் பூராகவும் பெற்ற பிள்ளைகளுக்காகவும், குடும்பத்துக்காகவும் உழைத்து மாடாய் தேய்ந்து போன ஒருவர் இறுதியில் யாருமற்ற நிலையில், நடுத்தெருவில் நிற்கும் அவலம் மிகக்கொடுமையானது.

இலங்கையில் அண்மைக்காலங்களில் பல பெற்றோர்கள் தான் பெற்ற பிள்ளைகளாலேயே நடுத்தெருவில் கைவிட்டுச் செல்கின்றனர்.

அந்தவகையில் காலியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கடந்த இரண்டு நாட்களாக கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் உள்ள இருக்கையில் அமர்ந்தவாறு தனது உறவுகள் வருவார்கள் என்ற நம்பிக்கையில் போவோர், வருவோரை பார்த்த வண்ணம் இருந்துள்ளார்.

இதை அவதானித்த சிலர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த இடத்திற்கு வந்த பொலிஸார் அந்த முதியவரை தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இவரின் மகள் வீடமைப்பு அதிகாரசபையில் பணிபுரிவதாக முதியவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதுடன், தன்னுடைய பிள்ளைகள் கொழும்பில் வசிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தான் தங்கியிருந்த வீட்டில் உள்ளவர்கள் தன்னை விகாரமாதேவி பூங்காவில் கொண்டு வந்து விட்டுச் சென்றதாகவும் முதியவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...

Comments