அம்பாந்தோட்டை இளைஞரின் சகோதரரும், சகோதரியும் கைது

Report Print Kumutha Kumutha in வாழ்க்கை முறை

கடந்த 5ம் திகதி நெல் மூட்iடைகளை திருடியதாகக் கூறி அம்பாந்தோட்டைபொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் இருந்துதப்பிச்சென்றிருந்தார்.

பொலிஸ் அதிகாரிகளுக்கு பெரிதும் நெருக்கடியைக் கொடுத்த இந்த விடயத்தினால் அம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் நால்வர் பணி நீக்கம்செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் பத்து நாட்களாக காணாமல் போயிருந்த குறித்த 20 வயது இளைஞன் கடந்த15ஆம் திகதி மாத்தறை பிரதேச விகாரை ஒன்றின் தேரரின் உதவியுடன் பொலிஸாரிடம்சரணடைந்தான்.

தற்சமயம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் இந்த இளைஞனின்சகோதரனும், சகோதரியும் இன்றைய தினம் தங்கல்ல பொலிஸ் அதிகாரிகளால்கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சிறையிலிருந்து தப்பிச்சென்ற சந்தேகநபருக்கு தங்குவதற்குஇடமளித்தமை, பாதுகாப்பு வழங்கியமை மற்றும் அரச பணியாளர்கள் மீது பொய்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டமை போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்இவர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Latest Offers

loading...

Comments