தமிழகத்தில் நீந்திக் கரை சேர்ந்த இலங்கை அகதிகள்! பொலிஸார் விசாரணை

Report Print Samy in வாழ்க்கை முறை

இராமநாதபுரம் மாவட்டம், சோழியக்குடி கடல் பகுதியில், தேவிபட்டினம் மரைன் போலீசார், நேற்று அதிகாலை ரோந்து சென்றனர்.

அப்போது பிளாஸ்டிக் கான்களை பிடித்து கரை சேர்ந்த, இருவர் சிக்கினர். விசாரணையில், அவர்கள் கார்த்திக், 23, சாந்தகுமார்,42, என தெரிய வந்தது.

கடந்த 1992ல் இலங்கை, திருகோணமலையில் இருந்து தமிழகத்திற்கு அகதியாக வந்த இவர்கள் சென்னை, முகப்பேரில் வெளிப்பதிவில் தங்கி, விசைப்படகு பழுது பார்க்கும் மெக்கானிக் தொழில் செய்பவர்கள் என தெரியவந்தது.

சில நாட்களுக்கு முன், காரங்காடு கடல் பகுதியில் பழுதான பிரிட்டோ என்பவரின் விசைப்படகை சரி செய்த போது தண்ணீர் புகுந்து படகு நீரில் மூழ்கியது.

தண்ணீரில் தத்தளித்த இருவரும் பிளாஸ்டிக் கான்களை பிடித்து நீந்தி கரை சேர்ந்தது தெரியவந்தது.

ஆனால், அவர்கள் கூறியது நம்பும்படியாக இல்லாததால் படகு உரிமையாளர் பிரிட்டோவிடம் விசாரணை நடக்கிறது.

கடந்த, 2014 ஆக., மாதம் திருச்சி, கொட்டப்பட்டு அகதிகள் முகாமில் இருந்து சயனைட் குப்பிகள், இலங்கை கரன்சிகளுடன் இலங்கைக்கு தப்ப முயன்ற விடுதலை புலி ஒருவரும், சில மாதங்களுக்கு முன் ஹெராயின் போதை பொருளுடன் ஒருவரும் போலீசில் சிக்கினர்.

தொண்டி, தேவிபட்டினம் உள்ளிட்ட கடல் பகுதிகளில் இருந்து டீசல், பெட்ரோல், கடல் அட்டை, மருந்து பொருட்கள் இலங்கைக்கு அடிக்கடி கடத்தப்படுகின்றன.

தற்போது சிக்கிய, இரண்டு பேரும் கடத்தல் பொருட்களுடன் இலங்கைக்கு தப்ப முயன்றிருக்கலாம், என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

- Dina Malar

Latest Offers

loading...

Comments