குடிப்பதற்கு மட்டுமாவது நீரை வழங்குங்கள்!- ஆதிவாசிகள் வேண்டுகோள்

Report Print Kumutha Kumutha in வாழ்க்கை முறை

தற்போது இலங்கையின் பல மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள வரட்சியினால்பொதுமக்களும், வனவிலங்குகளும் பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.

அந்த வகையில் மஹியங்கன, தம்மான உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் ஆதிவாசிகள்வரட்சியினால் நீரின்றி பெரிதும் அல்லலுறுவதாக தெரிவித்துள்ளனர்.

தம்மான, குருகும்பர, வதுயாய மற்றும் திதின்கல ஆகிய கிராமங்களுக்கு குடிப்பதற்குமட்டுமாவது நீரைப் பெற்றுத்தருமாறு ஆதிவாசிகளின்; தலைவர் ஊருவரிகே வன்னிலஎத்தோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நிலவும் வரட்சியான காலநிலையைப் பார்க்கும் போது இன்னும் பல மாதங்களுக்கு மழைகிடைப்பது சந்தேகத்திற்கிடமாக உள்ளதாகவும், நீர் பிரச்சினையால் தமது இனத்தினர்முரண்பட்டு கொள்வதோடு, அது பின்னர் பாரிய கலகத்தில் போய் முடிவதாகவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் வரட்சி ஏற்படும் பொழுது பிரதேச செயலகம், பிரதேச சபை ஆகியவைதமது கிராமங்களுக்கு நீரை விநியோகித்து வந்ததாகவும், ஆனால் இந்த வருடம்எந்தவொரு அதிகாரியும் தமது கிராமங்கள் இருக்கும் திசைப் பக்கம் கூடதிரும்பிப் பார்க்கவில்லை என்றும் ஆதிவாசிகளின் தலைவர் தெரிவித்துள்ளார்.

எனவே தமது கிராமங்களுக்கு குடிப்பதற்கு மாத்திரமாவது நீரை வழங்குமாறும்இவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest Offers

loading...

Comments