பெண்ணைக் கடத்தியவரை விடுதலை செய்தார் நீதிபதி கணேசராஜா!

Report Print Reeron Reeron in வாழ்க்கை முறை
406Shares

பெண்ணைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலின் பேரில் நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட நீதவான் எம்.கணேசராஜா விடுதலை செய்துள்ளார்.

05.09.2014 பெண்ணைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட வழக்கில் மேற்படி நபர் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலைப் பெறும்பொருட்டு சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட வழக்கில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய 25.10.2016 அன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பெண்ணைக் கடத்திச் சென்றார் என்ற குற்றச்சாட்டில் இவருக்கு எதிராக போதிய சான்றுகள் இல்லாத காரணத்தினாலும் இருவரும் காதல் திருமணம் புரிந்துள்ள காரணத்தினால் நபர் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Comments