தாயின் பிரிவை தாங்க முடியாமல் தற்கொலை செய்த தனயன்

Report Print Kamel Kamel in வாழ்க்கை முறை
186Shares

தாயின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாது மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று மாத்தளை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

தனது தாய் உயிரிழந்த பிரிவினை தாங்கிக் கொள்ள முடியாது 17 வயதான இளைஞர் ஒருவர் ரயிலில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

மாத்தளை வெரகந்த வத்த பிரதேசத்தில் வசித்து வந்த ரசிக ஜயசேகர என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று மாத்தளையிலிருந்த கண்டி நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டு இந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

ஐம்பது வயதான தாய் உயிரிழந்து விட்டதாகவும் இன்றைய தினம் தாயின் இறுதிக் கிரியைகள் நடைபெறவிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் தாயின் உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இளைஞர் ஓடும் ரயிலில் மோதுண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் பிரதேச மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மாத்தளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Comments