சாட்சியாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த தெமட்டகொட சமிந்த

Report Print Steephen Steephen in வாழ்க்கை முறை
77Shares

சிகையலங்கார கடை ஒன்றில் ஒருவரை சுட்டுக் கொன்றதாக கூறப்படும் வழக்கின் இரண்டு சாட்சியாளர்களுக்கு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் தொட்டகொட சமிந்த என்பவர் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

தொமட்டகொடை சமிந்த, பாரத லக்ஷ்மன் பிரேமஜயந்த கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியாவார்.

இவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நேரத்தில் இரண்டு சாட்சியாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என கூறப்படும் சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

தெமட்டகொட சமிந்த இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த அழைத்து வரப்பட்டதால், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

Comments