முல்லைத்தீவில் இராணுவத்தினரின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கின்றதா?

Report Print Mohan Mohan in வாழ்க்கை முறை
80Shares

முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினரின் வாகனங்கள் பொதுமக்களின்போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு , முள்ளியவளை, தண்ணீரூற்று, புதுக்குடியிருப்பு உள்ளிட்டபிரதேசங்களில் இராணுவத்தினரின் வாகனங்கள் அதிகளவு பிரதான வீதிகளுக்கு தினமும்வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பிழையான இடங்களில் தரித்து நிறுத்தப்படுவதாகவும் பொதுமக்கள்சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த வாகனங்களின் இடையூறுகளின் காரணத்தினால் தரித்து நிற்கும் இராணுவவாகனங்களை பொதுமக்களின் வாகனங்கள் கடக்கும்போது பிரதான வீதிகள்ஒருவழிப்பாதையாக மாறுகின்றதாகவும் கூறப்படுகின்றது.

அதனால் எதிரே வரும் வாகனங்கள் பயணத்தை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுவதாகவும்தனியார் சாரதிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

வீதிக்கு வரும் இராணுவத்தினரின் வாகனங்களை இராணுவப் பொலிஸ் பிரிவினர்கண்காணித்து வருகின்ற போதும் இவ்வாறான தவறுகள் ஏற்படுகின்றமை இராணுவத்தினரின்ஆதிக்கம்முல்லைத்தீவில் மேலோங்கி இருப்பதாக பொதுமக்கள் மத்தியில்கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments