சவுதியில் பணிபுரிந்த பெண்ணுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

Report Print Steephen Steephen in வாழ்க்கை முறை
1319Shares

சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் ஒரு வருடமாக சம்பளம் வழங்கப்படாமல் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிந்த பெண்ணொருவருக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் செலுத்தப்பட வேண்டிய பணத்தை வழங்கியுள்ளது.

கிளிநொச்சி, பூநகரி பிரதேசத்தை சேர்ந்த செல்லத்துரை ஜெக்லின் என்ற பெண்ணுக்கே இந்த பணம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பெண் பணிபுரிந்த வீட்டின் உரிமையாளர் முதலாம் ஆண்டில் சம்பளம் வழங்கியுள்ளதுடன் இரண்டாம் ஆண்டில் இருந்து சம்பளம் வழங்கவில்லை என வேலை வாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் உறவினர்கள் மூலம் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திற்கும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து இலங்கை தூதரகம் சவுதி அரேபியாவின் தொழில் நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்து செலுத்தப்பட வேண்டிய 17 ஆயிரம் ரியால்களை வீட்டு உரிமையாளரிடம் பெற்றுள்ளது.

இலங்கை ரூபா மதிப்பில் இது 6 லட்சத்து 77 ஆயிரத்து 167 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் நாடு திரும்பிய தினத்தில் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைவர் காசோலை மூலம் பணத்தை பெண்ணிடம் கையளித்துள்ளார்.

Comments