கப்பல் ஒன்றில் இருந்து விழுந்து வெளிநாட்டவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
48 வயதான வெளிநாட்டவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து காலி பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
எகிப்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சென்ற சென்னோவா என்ற கப்பலின் பாதுகாப்புக்காக சென்றிருந்த மூன்று பேரை காலி துறைமுகத்திற்கு அழைத்து வர மற்றுமொரு படகு சென்றுள்ளது.
இவர்கள் மூவரையும் கப்பலில் இருந்து படகில் ஏற்ற முயற்சித்த போது அவர்களில் ஒருவர் கடலில் விழுந்துள்ளார்.
சம்பவத்தில் க்வேலஷியன் நாட்டை சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார். சடலம் கப்பலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.