ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை முடக்கிய நபருக்கு பிணை

Report Print Steephen Steephen in வாழ்க்கை முறை
34Shares

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அனுமதியின்றி பிரவேசித்து அதில் உள்ள தரவுகளை அழித்தார் என்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபரை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார இன்று உத்தரவிட்டுள்ளார்.

அனுருத்த அர்ஷ அபேசூரிய என்ற நபரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் இணைத்தளத்திற்குள் பிரவேசித்து அதில் இருந்த மக்களின் முறைப்பாடுகளை ஊடக நிறுவனங்களுக்கு வழங்கிய சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் இந்த நபரை கைது செய்தனர்.

சந்தேக நபரை 10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Comments