அவிசாவளை - மாதொல பிரதேசத்தில் மாணிக்ககல் வர்த்தகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
42 வயதான இந்த வர்த்தகர் இனந்தெரியாத சிலரால் நேற்றிரவு பல முறை தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணிக்ககல் சுரங்கம் ஒன்று சம்பந்தமாக நீண்டகாலமாக இருந்து வந்த தகராறு இந்த கொலைக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.