யாழில் விபத்து : திருமணமாகி ஆறே நாட்களில் கணவன் உயிரிழப்பு மனைவி படுகாயம்

Report Print Sumi in வாழ்க்கை முறை
384Shares

யாழ்ப்பாணம் அராலியூர் சந்தியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த டிபர் வாகனமும், அராலியூர் பகுதியில் இருந்து வந்த மோட்டார் வண்டியும் மோதியததாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்துச் சம்பவத்தில் வேலணைப் பகுதியைச் சேர்ந்த தவனேஸ்வரன் பிரபாகரன் (வயது 29) என்ற குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே பலியாகியதுடன், மனைவி படுகாயங்களுக்கு உள்ளாகி உள்ளார்.

குறித்த இருவருக்கும் திருமணமாகி ஆறு நாட்களே கடந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை படுகாயமடைந்த அவரது மனைவி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments