3 லட்சம் செலுத்த பாடகர் தனுஸ்க இணக்கம்!

Report Print Ramya in வாழ்க்கை முறை

பிரபல பொப் இசைப் பாடகர் எம்.எஸ். பெர்னாண்டோவின் பாடல்களை அனுமதியின்றிபாடியமை தொடர்பான வழக்கில் பாடகர் தனுஸ்க உள்ளிட்ட இரு தரப்பினரும் இணக்கம்தெரிவித்துள்ளனர்.

எனவே,எம்.எஸ்.பெர்னாண்டோவின் மகனுக்கு மூன்று லட்சம் ரூபா இழப்பீடு தொகைசெலுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவான்இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மார்ச் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் குறித்த பணத்தை செலுத்துவதாக பாடகர்எம்.ஜீ. தனுஸ்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

எம்.எஸ்.பெர்னாண்டோவின் மகன் சரத் பெர்னாண்டோ செய்த முறைப்பாட்டின்அடிப்படையில் எம்.ஜீ. தனுஸ்க கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலைசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments