அழிந்து போவீர்கள் என விமானப்படையினரை திட்டி சாபமிட்ட கேப்பாபிலவு மக்கள்

Report Print Suthanthiran Suthanthiran in வாழ்க்கை முறை
72Shares

முல்லைத்தீவு- பிலக்குடியிருப்பு மக்க ளின் நில மீட்பு போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் பிலக்குடியிருப் பில் இன்றைய தினம் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் மக்களைப் படம் பிடித்த விமானப்படையினரை மக்கள்மண்ணைவாரி திட்டி தீர்த்துள்ளதுடன் அழிந்து போவீர்கள் எனவும்சாபமிட்டுள்ளனர்.

பிலக்குடியிருப்பு மக்கள் தங்கள் நிலங்களில் இருந்து விமானப் படையினர்வெளியேற்றப்பட வேண்டும். எனக் கோரி கடந்த 23 நாட்களாக தொடர் கவனயீர்ப்புபோராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இதற்கு வலுச்சேர்க்கும் வகையில்பிலக்குடியிருப்பு விமானப்படை முகாம் முன்பாக இன்று மாதியம் 12 மணியளவில்கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டிருந்த மக்களை விமானப் படையினர் தங்கள்முகாமுக்குள் இருந்தவாறு சிரித்தபடி கமரா மற்றும் தொலைபேசி ஆகியவற்றைபயன்படுத்தி படம் பிடித்தனர்.

இந்நிலையில் ஆத்திரமடைந்த மக்கள் விமானபடையினரை நோக்கி மண்ணை வாரி எறிந்து தூற்றியதுடன் எங்கள் நிலத்தை விட்டுவெளியேறி உங்கள் வீடுகளுக்கு சென்று மனைவி, பிள்ளைகளை படம் பிடி எனகூறியதுடன்,எங்கள் வாழ்வை அழித்த நீங்களும் அழிந்தே போவீர்கள் எனவும் திட்டியுள்ளனர்.

Comments