உலகின் அதிக எடையுள்ள பெண்! 2 மாதத்தில் 262 கிலோவை இழந்தார்

Report Print Samy in வாழ்க்கை முறை
உலகின் அதிக எடையுள்ள பெண்! 2 மாதத்தில் 262 கிலோவை இழந்தார்
304Shares

மும்பையில் சிகிச்சை பெற்று வரும் உலகின் அதிக எடையுள்ள பெண்ணான எமான் 2 மாதத்தில் தனது உடல் எடையில் 262 கிலோவை இழந்தார்.

உலகின் அதிக உடல் எடை கொண்ட எகிப்து பெண்ணான எமான் அகமது மும்பையில் உள்ள சைஃபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தனது உடல் எடையை குறைப்பதற்காக கடந்த பெப்ரவரி 11ம் திகதி மும்பை வந்த எமான், கடந்த 2 மாதங்களாக தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

சைஃபி மருத்துவமனையில் முபசல் லக்டவாலா மற்றும் அவரது மருத்துவக்குழு அளித்த சிகிச்சையின் பலனாக தனது உடல் எடையான 498 கிலோவில் இருந்து 262 கிலோ எடையை இழந்துள்ளார்.

இது குறித்து சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் முபசல் லக்டவாலா கூறுகையில்,

36 வயதான எமானுக்கு, லாப்ராஸ்கோப்பி எனப்படும் குடல்வாழ் அறுவை சிகிச்சைக்காக இரைப்பையின் அடிவயிற்றுப் பகுதியை குறைக்க சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதன் மூலம் 498 கிலோ எடை கொண்ட தனது உடல் எடையில் 262 கிலோவை அவர் இழந்துள்ளார் என்று கூறினார்.

கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் 40 சதவீதம் வரை எமானின் உடல் எடை குறைக்கப்பட்டு உள்ளது.

உடலில் இருந்து அதிகளவிலான தண்ணீரை வெளியேற்றி உடல் எடையை குறைத்து வருவதாக மும்பை சைஃபி மருத்துவமனை தலைவரும், மருத்துவருமான முபசல் லக்டவாலா தெரிவித்துள்ளார்.

கடந்த 25 வருடங்களாக, அலெக்சாண்ட்ரியாவில் உள்ள வீட்டில் உள்ள தனது அறையை விட்டு வெளியேறாமல் இருந்த எமான் சிகிச்சைக்காக, சிறப்பு சரக்கு விமானம் மூலம் இந்தியா வந்தார்.

இதையடுத்து விமான நிலையத்திலிருந்து மருத்துவமனைக்கு லொறி மற்றும் கிரேன் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவர்கள் எமானுக்கு சரியான இடைவேளையில் பத்திய முறைப்படியே உணவு வழங்கி வருகின்றனர். நீர் ஆகாரங்களையே அதிகளவில் அளித்து வருகின்றனர்.

அதன்படி தற்போது, 262 கிலோ உடல் எடையை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Maalai Malar

Comments