மீதொட்டமுல்ல பகுதியில் தொற்று நோய் பரவுவதனை தடுக்க நடவடிக்கை

Report Print Ajith Ajith in வாழ்க்கை முறை
59Shares

மீதொட்டமுல்ல பகுதியில் தொற்று நோய் பரவுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மீதொட்டமுல்லை குப்பை மேட்டு சரிவை அடுத்து, அந்த பகுதியில் நோய் பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளவர்கள் மத்தியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனினும் இதனை தடுக்கும் வழிமுறைகள் தற்போது கையாளப்படுவதாக, வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி தனிமனித சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், நுளம்பு உள்ளிட்ட நோய் காவிகளின் ஊடாக ஏற்படுகின்ற நோய்ப் பரவலையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இடம்பெயர்ந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்துகளும் இலவசமாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments