வீட்டுக்குள் நுழைந்த பாம்புக்கு பூஜை செய்த யுவதி!

Report Print Mohan Mohan in வாழ்க்கை முறை
2858Shares

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பகுதியில் கருநாக இனத்தைச் சேர்ந்த பாம்பு ஒன்று மண்குடிசை வீட்டுக்குள் நுளைந்ததாக அப்பகுதி யுவதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக குறித்த யுவதி மேலும் தெரிவிக்கையில்..

இன்று நன்பகல் எனது வீட்டில் நான் மட்டும் தனியாக இருந்த சமயம் வீட்டின் சுவாமிஅறைப் பகுதியில் ஏதோ சத்தம் கேட்டது.

அப்பொழுது நான் உட்சென்று பார்த்த போது சுவாமி படங்களுக்கு நடுவே ஒரு பாம்பு நிற்பதை அவதானித்தேன்.

திடீரென பார்த்ததும் எனக்கு ஒருவித அச்சம் ஏற்பட்டது.இருப்பினும் நான் நிதானமாக அந்த பாம்புக்கு பூஜை செய்ய விரும்பினேன். அதற்காக அவசரப்படாமல் ஒழுங்குகளை செய்தேன்.

நான் பூஜையை ஆரம்பிக்க சுமார் 30 நிமிடங்கள் தேவைப்பட்டது. அதுவரை அந்த பாம்புஅவ்விடத்தினை விட்டு நகராமல் இருந்தது எனக்கு மிக மகிழ்ச்சியை தந்துள்ளது.

பின்னர் பாம்புக்கு பால் வைத்து பூக்கள் இட்டு தூபம்காட்டிய பின்னர் அது அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த பாம்புக்கு பூஜை வைத்த பின்னர் சம்பவத்தை பெற்றோருக்கு தெரிவிப்பதற்கு தனது கையடக்கத் தொலைபேசியினால் புகைப்படங்கள் எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments