இலங்கையர் ஒருவர் மும்பையில் கைது

Report Print Ajith Ajith in வாழ்க்கை முறை

இந்தியாவிலிருந்து தங்க பிஸ்கட்டுக்களை கடத்த முயற்சித்த இலங்கையர் ஒருவர் மும்பைவிமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 505 கிராம் தங்க பிஸ்கட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரிடமிருந்து மீட்கப்பட்ட தங்க பிஸ்கட்டுக்களின் பெறுமதி 14.9 லட்சம் இந்திய ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் உலோகத்தை அடையாளம் காணும் சோதனைப்பெட்டியின் ஊடாக அவர்சென்ற போது, அங்குள்ள சமிக்ஞை ஒலித்துள்ளது.

இதையடுத்து. அங்கிருந்த அதிகாரிகள் அவரை சோதனையிட்ட போது, 205 கிராம் தங்க பிஸ்கட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன.

பின்னர் உலோகத்தை அடையாளம் காணும் சோதனைப் பெட்டியின் ஊடாக அவர் மீண்டும்சென்ற போது, அங்குள்ள சமிக்ஞை மீண்டும் ஒலித்துள்ளது.

இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசரணையில் அவர் 300 கிராம் தங்க வில்லைகளைஏற்கனவே விழுங்கி இருந்தமை தெரியவந்துள்ளது.

பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, குறித்த தங்க பிஸ்கட்டுக்கள் மீட்கப்பட்டதாக, விமானப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Comments