சிறுவர் துஷ்பிரயோகம்! காட்டிக் கொடுத்த காணொளி!

Report Print Kamel Kamel in வாழ்க்கை முறை

மிகவும் மோசமான வகையில் சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட இருவர் வீடியோ ஆதாரத்தின் ஊடாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலை மாணவர்கள் இருவரை கடுமையாக பாலியல் ரீதியாக துன்புறுத்திய இரண்டு பேரை காலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடுமையாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி அந்த காணொளிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிய இரண்டு நபர்களையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த இரண்டு மாணவர்களும் காலி நகரத்தில் உள்ள விஹாரை ஒன்றின் பிரத்தியேக வகுப்பில் கல்வி கற்று வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரத்தியேக வகுப்பின் நிகழ்வு ஒன்றுக்காக நிதி திரட்டும் நோக்கில் மாணவர்களுக்கு கூப்பன்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு வீடு வீடாக சென்று நிதி திரட்டிய போது, சந்தேக நபர் ஒருவர் மாணவர்களை வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி அந்தக் காட்சிகளை நண்பரின் உதவியுடன் வீடியோ படமெடுத்துள்ளதாகவும் பின்னர் குறித்த நண்பரும் மாணவரை துஸ்பிரயோகம் செய்துள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரயவந்துள்ளது.

மற்றைய மாணவரும் இதேவிதமாக அழைத்துச் செல்லப்பட்டு துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு அந்தக் காட்சிகளும் வீடியோ படமெடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு ஒன்றில் மாணவர் ஒருவரின் உறவினர் ஒருவர் இந்த காணொளியை பார்த்து, மாணவரின் பெற்றோருக்கு இது குறித்து தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பெற்றோர் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.இதற்கு அமைய சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்களது செல்லிடப்பேசிகளையும் கைபற்றியுள்ளனர்.

சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். அதேவேளை, செல்லிடப்பேசிகள் மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்து கணொளிகள் பற்றிய விபரங்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.