அரசியல் பழிவாங்கல்களுக்கு இலக்கான 40 பொலிஸாருக்கு பதவி உயர்வு

Report Print Kamel Kamel in வாழ்க்கை

அரசியல் பழிவாங்கல்களுக்கு இலக்கான மேலும் 40 பொலிஸ் உத்தியோத்தகர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.

எதிர்வரும் நாட்களில் சுமார் 40 பொலிஸ் உத்தியோதக்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே கொழும்பு பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கப்பட்டு பதவி உயர்வு வழங்கப்படாதவர்களுக்கு இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.

அரசியல் பழிவாங்கல்களுக்கு இலக்கான 129 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நியாயம் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சட்டம் ஒழுங்கு அமைச்சின் ஊடாக இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.

இவர்களில் மகேன் குணசேகர என்ற அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

பரிந்துரை செய்யப்பட்டுள்ள ஏனைய அதிகாரிகளுக்கு விரைவில் பதவி உயர்வு வழங்கப்படும் என பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...

Comments