காணாமல் போன கணவரின் எலும்புக்கூடு மட்டுமே மிச்சம்!

Report Print Shalini in வாழ்க்கை

நானு ஓயா பகுதியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடு ரம்பாதெனிய பகுதியில் காணமல் போய் தேடப்பட்டு வந்தவரின் உடல் எச்சம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா - ஹற்றன் பிரதான வீதியில் நானுஓயா பங்களா அத்தப்பகுதியில் நேற்று மாலை மீட்கப்பட்ட எலும்புக் கூட்டு எச்சங்கள் கினிகத்தேன ரம்பாதெனிய பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான விஜேதுங்க என அவரது மனைவி இன்று அடையாளம் காட்டியுள்ளார்.

காணாமல் போன என் கணவர் எலும்புக் கூடாகவே கிடைத்துள்ளார் என மனைவி கண்ணீர் விட்டழுதார்.

கடந்த 19ஆம் திகதி வீட்டிலிருந்து ஹற்றனுக்கு செல்வதாக கூறி மோட்டார் சைக்கிளில் சென்றவரை காணவில்லை என்று மனைவியால் கினிகத்தேன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்படிருந்தது.

இந்த நிலையில் கைவிடப்பட்ட நிலையில் வட்டவளை பகுதியில் மோட்டார் சைக்கிளை வட்டவளை பொலிஸார் மீட்டனர்.

எனினும் காணாமல் போனவர் தொடர்பில் தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வந்த நிலையிலே நேற்று நானு ஓயா பங்கா அத்த காட்டுப் பகுதியில் எலும்புக்கூடு மீட்கப்பட்டது.

குறித்த எலும்புக்கூட்டை பார்வையிட்ட மேற் குறிப்பிட்ட நபரின் மனைவி, தனது கணவரின் உடல் எச்சங்களே என அடையாளம் காட்டியுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

Latest Offers

loading...

Comments