சாதாரணதர மாணவனை தாக்கிய உயர்தர வகுப்பு மாணவர்கள் மூவர் கைது

Report Print Kumutha Kumutha in வாழ்க்கை

பண்டாரவளையில் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரை, உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மூவர் தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பண்டாரவளை ஹல்பே மத்திய மகா வித்தியாலயத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த மாணவன் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதலை மேற்கொண்ட 12ஆம் வகுப்பு மாணவர்கள் மூவர் எல்ல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பதுளை வைத்தியசாலை மூலம் பொலிஸாருக்கு அறிவிக்கும் வரை இந்த விடயத்தை பொலிஸாருக்கு அறிவிக்காது மறைத்த பாடசாலை அதிபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Latest Offers

loading...

Comments