இளைஞனும் சிறுமியும் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி!

Report Print Loges in வாழ்க்கை

பொகவந்தலாவ கிவ் தோட்டத்தில் 13 வயது சிறுமி மற்றும் 24 வயது இளைஞன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

பொகவந்தலாவ கிவ் தோட்டத்தில் 13 வயது பாடசாலை சிறுமியும் 24 வயது இளைஞனும் விஷம் அருந்தி தற்கொலை முயற்சிக்கு ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக பொகவந்தலாவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கிவ் தோட்டத்தைச் சோ்ந்த 24 வயது இளைஞன் வீட்டில் எவரும் இல்லாத நிலையில் விசம் அருந்தியுள்ளதாகவும் குறித்த இளைஞன் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரி ஒருவா் தெரிவித்தார்.

இதேவேளை அதே தோட்டத்தைச் சேர்ந்த 13 வயது பாடசாலை சிறுமியும் வீட்டில் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சிறுமியின் பெற்றோர்கள் வைபவம் ஒன்றுக்காக பொகவந்தலாவ நகர பகுதிக்கு சென்றிருந்த வேலையிலயே, இந்த சிறுமி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சிறுமி பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் இவர்களின் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுவரை கண்டறியவில்லை. இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers

loading...

Comments