தொழிலின்றி தவிக்கும் முன்னாள் போராளிகள்

Report Print Reeron Reeron in வாழ்க்கை

தேச விடுதலைக்காக கடந்த காலங்களில் இயக்கங்களில் போராட்ட சக்திகளாக இருந்த எமது முன்னாள் போராளிகள் எத்தனையோ பேர் இன்றைய நிலையில் தொழிலின்றி இருக்கும் நிலைமை காணப்படுகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரன் (ஜனா) தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் தனது மாகாண சபை ஊடாக ஒதுக்கப்பட்ட நிதியினைக் கொண்டு களுவன்கேணி பிரதான வீதியின் சுமார் 1.78 கிலோ மீற்றர் தூரம் கொண்ட ஒரு பகுதிக்கான வேலைத்திட்டத்தினை இன்றைய தினம் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்துவைத்த பின்னர் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இங்கு அவர் தொடந்து கருத்துத் தெரிவிக்கையில்,

எதிர் வரும் மாதத்தில் அரசியல் யாப்பு திருத்த முன்யோசனை வரயிருக்கின்றது, அதனடிப்படையில் நாட்டின் இனப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாக இருந்தால் வடகிழக்கு இணைக்கப்பட வேண்டும்.

வடகிழக்கு இணைப்பு தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பை வலியிறுத்துக்கின்றோம், அதன் மூலமாக தமிழர்களை தமிழரே ஆளுகின்ற ஒரு சுயாட்சியைக் கொண்டுவர வேண்டும்.

அதன் மூலமாக கிழக்கு மாகாணத்துக்கு என ஒரு நிதியம் ஏற்படுத்தப்பட வேண்டும், அதன் மூலமாக புலம்பெயர் தேசங்களில் இருக்கும் எமது உறவுகள் இங்கு வந்து தங்களின் முதலீடுகளை செய்ய வேண்டும்.

கடந்த காலங்களில் இயக்கங்களில் போராட்ட சக்திகளாக இருந்த எமது முன்னாள் போராளிகள் எத்தனையோ பேர் இன்றைய நிலையில் தொழிலின்றி இருக்கின்றார்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றம் செய்வதற்கான செய்றபாடுகளை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...

Comments