இருவேறு விபத்துக்களில் இருவர் பலி

Report Print Ajith Ajith in வாழ்க்கை

கண்டியிலும் பூண்டுலோயாவிலும் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கண்டி பேராதெனிய இந்திகல என்ற இடத்தில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் பேராதெனிய பல்கலைக்கழகத்தில் பயிலும் இரத்தினபுரி மாணவர் ஒருவர் பலியானார்.

மாணவன் செலுத்திச்சென்ற மோட்டார் சைக்கிள் லொறி ஒன்றுடன் மோதியபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, பூண்டுலோயா நகரிலிருந்து நுவரெலியா நோக்கி செல்வதற்காக பாதையை கடந்த பெண் ஒருவர் மீது முச்சக்கர வண்டி மோதியதில் குறித்த பெண் விபத்து நடந்த இடத்திலேயே பலியாகி உள்ளார்.

இந்த விபத்து இன்று காலை இடம் பெற்றுள்ளதாகவும், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பூண்டலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers

loading...

Comments