தாயொருவரை கோழி கூட்டில் அடைத்து சங்கிலியில் கட்டி வைத்திருந்த மகள் கைது

Report Print Vethu Vethu in வாழ்க்கை
2015Shares

களுத்துறையில் தாயொருவரை கோழி கூட்டில் அடைத்து சங்கிலியில் கட்டி வைத்திருந்த மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை மாவட்டத்திற்கு உட்பட்ட கல்கமுவ, வன்னிகுடாவெவ பிரதேச வீடொன்றில் இந்த அவலம் இடம்பெற்றுள்ளது.

அந்தப் பகுதியில் 85 வயதுடைய முஸ்லிம் வயோதிப தாயொருவர் கோழிக் கூட்டில் அடைத்து வைத்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த தாய் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுரும்மதுகே ஹவ்உம்மா என்ற பெண்மணியே இவ்வாறு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தயான அவர் மனநோய் நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ளதனால் இரவு நேரங்களில் சங்கிலியால் கட்டி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக அவரது மகள் கல்கமுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டில் வசிக்கும் அவரது மகளால் அவருக்கு அவசியமான உணவு வழங்குதல், குளிக்க வைத்தல் போன்றவைகள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த மகளின் கணவர் அவரை விட்டு சென்றுள்ளமையினால் மிகவும் கஷ்டமான நிலையில் தாயாரை பார்த்துக் கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

அலட்சியப்படுத்தியமை மற்றும் கொடுமை படுத்தியமை காரணமாக கைது செய்யப்பட்ட அவரது மகளை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலமாக இலங்கையில் தமது பெற்றோரை, நாய் கூடுகள், சிறை கூடுகள் போன்றவற்றில் அடைத்து வைக்கும் சம்பங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments