உயிர் கொடுக்கும் தாய்ப்பாலே உயிரெடுத்த சோகம்! 11 நாட்களேயான சிசு பலி

Report Print Shalini in வாழ்க்கை
315Shares

யாழ்ப்பாணம் - கைதடி, நுணாவில் பகுதியில் தாய்ப்பால் புரைக்கேறி 11 நாட்களேயான சிசு உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று(26) அதிகாலை வேளையில் நடந்துள்ளதாக சாவகச்சேரியின் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தில் நுணாவில் பகுதியைச் சேர்ந்த பிரகதீஸ்சர்மா என்ற சிசுவே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நித்திரையிலிருந்து எழுந்த சிசுவுக்கு தாயார், தாய்ப்பால் கொடுத்துள்ளார். தாய்ப்பால் அருந்திய பின்னர் சிசுவுக்கு விக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, சிசுவை, வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போது, சிசு, முன்னதாகவே உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Comments